22 இந்தியர்களுடன் சென்ற இந்திய கப்பல் நைஜீரியா அருகே மாயம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினி அருகே 22 இந்தியர்களுடன் சென்ற வணிகக் கப்பல் ஒன்று மாயமாகியுள்ளது. 

Photo: Maritime-Executive

மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் 'Anglo Eastern shipping' நிறுவனத்தின் 'மரைன் எக்ஸ்பிரஸ்' என்ற வணிகக் கப்பல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு 22 இந்தியர்களுடன் நைஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டது. மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியின் பெனின் கடலில் சென்றுகொண்டிருந்த போது கப்பல் மாயமாகியுள்ளது. இதனையடுத்து, கப்பலை தேடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. நைஜீரிய அரசின் உதவியுடன் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அநேகமாக, கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இந்தியா- நைஜீரியா நாடுகள் இணைந்து கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து கப்பல் குறித்த தகவல்களை கண்காணித்து கொண்டு வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்த்துள்ளார். இதேபோல், 'Anglo Eastern shipping' நிறுவனமும் மும்பை கப்பல் இயக்குநரகத்தைத் தொடர்பு கொண்டு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மாயமான கப்பலை கண்டுபிடிக்க நைஜீரியா அரசுடன் தொடர்பில் இருக்கவும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!