வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (05/02/2018)

கடைசி தொடர்பு:10:19 (05/02/2018)

கோமியத்திலிருந்து மருந்துகள்! - ஆதித்யநாத் அரசின் அடுத்த மூவ்

கோமியத்திலிருந்து தரையைச் சுத்தம்செய்யும் கிருமிநாசினி தயாரிக்கும் முயற்சி மேற்கொண்ட உத்தரப்பிரதேச அரசு, தற்போது கோமியத்திலிருந்து மருந்துகள் தயாரிக்கவும் தீவிரம்காட்டிவருகிறது. 

yogi
 

மாட்டிலிருந்து கிடைக்கும் சிறுநீர் (கோமியம்), சாணம், பால் ஆகியவற்றின்மூலம் ’பஞ்சகவ்யம்’ தயாரிக்கப்படுகிறது. ’பஞ்சகவ்யம்’ பற்றி ஆராய, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம், 19 பேர்கொண்ட  தேசியக் குழு அமைக்கப்பட்டது. தற்போது, கோமியத்தைப் பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்க உத்தரப்பிரதேச ஆயுர்வேதத்துறை மும்முரம்காட்டிவருகிறது. முதற்கட்டமாக, கோமியத்தைப் பயன்படுத்தி எட்டு மருந்துகள் தயாரித்து அறிமுகம்செய்துள்ளது. 

இதுகுறித்து, உ.பி ஆயுர்வேதத்துறையின் இயக்குநர் ஆர்.ஆர். சௌத்திரி கூறுகையில், ‘மாட்டின் சிறுநீரான கோமியம், மருத்துவக் குணங்கள் நிறைந்தது. இது, கிருமி நாசினியாகவும் செயல்படும். மாட்டிலிருந்து கிடைக்கும் பஞ்சகவ்யமும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. கோமியத்திலிருந்து மருந்துகள் தயாரிப்பதை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு ஊக்குவித்து வருகிறது. சமீபத்தில், உ.பி ஆயுர்வேதத்துறை சார்பில் கோமியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட எட்டு மருந்துகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்துகள், கல்லீரல் நோய், மூட்டு வலி மற்றும் நோய் எதிர்ப்புசக்திக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். இன்னும் பல்வேறு மருந்துகள் தயாரிக்கவும் ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறோம்.உ.பி அரசின் கீழ் இயங்கிவரும் லக்னோ மற்றும் பிலிபட்டில் உள்ள ஆயுர்வேத மருந்துத் தொழிற்சாலைகளில் இந்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க