வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (05/02/2018)

கடைசி தொடர்பு:13:15 (05/02/2018)

செல்ஃபி எடுக்க முயன்றவரை அதிரவைத்த அமைச்சர்!

கர்நாடக அமைச்சர் ஒருவர், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்றவரின் கையை கோபத்துடன் தட்டிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநில எரிசக்தித்துறை அமைச்சராக இருப்பவர், டி.கே. சிவகுமார். கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, பெல்லாரி பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதனிடையே, நேற்று பெல்லாரி பகுதிக்குச் சென்ற சிவகுமார், ராகுல்காந்தி உரையாற்ற உள்ள மேடை ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர், சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். இதனால் கடுப்பான சிவகுமார், செல்ஃபி எடுக்க முயன்றவரின் கையை கோபத்துடன் தட்டிவிட்டார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதனிடையே, செல்ஃபி எடுக்க முயன்றவர்களை சிவகுமார் தாக்குவது, இது முதல் முறையல்ல. கடந்த வருடம் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவரை சிவகுமார் தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க