``வேலையில்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்பதுமேல்!" - சர்ச்சையான அமித்ஷாவின் கன்னிப்பேச்சு! | Selling Pakoda Better Than Joblessness: Amit Shah Counters Congress

வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (05/02/2018)

கடைசி தொடர்பு:16:54 (05/02/2018)

``வேலையில்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்பதுமேல்!" - சர்ச்சையான அமித்ஷாவின் கன்னிப்பேச்சு!

வேலை இல்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்பது எவ்வளவோ மேல் எனப் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா நாடாளு மன்றத்தில் இன்று முதல்முறையாகப் பேசினார். 

அதில், "சுதந்திரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் அல்லாத கட்சி முதல்முறையாகப் பெரும்பான்மையுடன் ஆட்சிபுரிகிறது என்றால் அது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம்தான். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்தப் பிரச்னை திடீரென உருவாகவில்லை. 55 வருஷம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்தான் அதற்குக் காரணம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கொள்கை முரண்பாடுகளே வேலையில்லா திண்டாட்டத்துக்கு வழிவகுத்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பல குடும்பங்கள் வங்கிக் கணக்குகூட இல்லாமல் இருந்தனர். ஆனால், பிரதமர் மோடியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் 31 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி, நாட்டின் ஒரு பெரிய முன்னேற்றம் ஆகும். ஏழைகளுக்கு நலன்களைத் தரும் ஜி.எஸ்.டி, தொழில்துறையினருக்கும் உதவி புரியும். பிரதமர் மோடி தனது ராஜதந்திரத்தின் மூலம் பாகிஸ்தானை கையாண்டு வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குக்குப் பிறகு, மற்ற நாடுகள் இந்தியாவை பார்க்கும் விதம் மாறியுள்ளது. அனைவருக்கும் வீடு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ள புதிய இந்தியாவை பிரதமர் உருவாக்க நினைக்கிறார். வரும் 2022-ம் ஆண்டுக்குள் அதை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது" என்றார். சமீபத்தில் 'சாலையோரத்தில் கடை அமைத்து, பக்கோடா விற்று 200 ரூபாய் சம்பாதிப்பதுகூட முன்னேற்றம்தான்' எனப் பிரதமர் மோடி கூறியிருந்தார். பிரதமர் மோடியின் இந்தக் கருத்து சர்ச்சையை உண்டாக்கியது. மேலும், இந்தக் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசிய அமித்ஷா, "பிச்சை எடுப்பதைவிட பக்கோடா விற்பது ஒரு வேலைதான். வேலை இல்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்பது எவ்வளவோ மேல். இதில் எந்த அவமானமும் இல்லை" எனத் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க