வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (06/02/2018)

கடைசி தொடர்பு:11:03 (06/02/2018)

`மும்பை பங்குச்சந்தை 1,250 புள்ளிகள் சரிவு’ - ரூ.5.40 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட பாதிப்பால், இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், இன்றைய வர்த்தகம் தொடங்கிய உடனே 1,000 புள்ளிகள் சரிந்தது. இதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் வர்த்தகத் தொடக்கத்தில் 300 புள்ளிகள் சரிந்தது. சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,250 புள்ளிகள் சரிந்து, 33,482 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால், முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. சில விநாடிகளில் ரூ.5.40 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதால், சந்தையில் முதலீடுசெய்தவர்கள் கவலை அடைந்துள்ளனர். அமெரிக்க சந்தைக் குறியீடுகளான எஸ்&பி 500 இண்டெக்ஸ் 2648.94 (-113.19) என்ற அளவிலும், டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 24345.75 (-1175.21) என்ற அளவிலும் நேற்று முடிவடைந்தது. இது, கிட்டத்தட்ட  4.6 சதவிகிதம் ஆகும். மேலும், ஆசிய சந்தைகளின் பங்குகளும் சரிவிலிருந்து தப்பிக்கவில்லை. ஜப்பான் நிக்கேய் பங்குச்சந்தை 5 சதவிகிதம் சரிவைச் சந்தித்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க