சிகிச்சைக்கு அழைத்துவந்தபோது தீவிரவாதிகள் நடத்திய வெறிச்செயல் - ஸ்ரீநகர் போலீஸைப் பதறவைத்த சம்பவம்

மருத்துவமனையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி சக தீவிரவாதியைத் தப்பிக்க வைத்த சம்பவம்  ஜம்மு-காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

naveed


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் இன்று காலை நவீத் என்னும் கைதியைச் சிகிச்சைக்காகப் போலீஸார் அழைத்து வந்தனர். நவீத் என்று அழைக்கப்படும் அபு ஹன்ஸுலா பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நவீத்தைப் போலீஸ் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சிலர், போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காவலர்கள் படுகாயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டின்போது நவீத் மருத்துவமனையில் இருந்து தப்பித்துச் சென்றார். சற்று நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களும் தப்பிச் சென்றனர். தப்பியோடியவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!