தமிழக மருத்துவக் கல்லூரிகளின் தரம் உயர்கிறது: மத்திய அரசு நிதி ஒதுக்கியது!

தமிழகத்தில் நான்கு மருத்துவக்கல்லூரிகளின் தரம் உயர்த்தப்படவுள்ளதாக மத்திய அமைச்சர்  அஸ்வினிகுமார் சவுபே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழகத்தில் நான்கு மருத்துவக் கல்லூரிகளின் தரம் உயர்த்தப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க எம்.பி லட்சுமணன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே, "தமிழகத்தில் நான்கு மருத்துவக் கல்லூரிகளின் தரம் உயர்த்தப்படவுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.100 கோடியும் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு ரூ.125 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், தஞ்சை மற்றும் நெல்லை மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா ரூ.120 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மருத்துவக் கல்லூரிகளின் தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு சிறப்பான சேவை அளிக்கப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!