'எதை விதைத்ததோ அதையே அறுவடைசெய்கிறது' : மக்களவையில் காங்கிரஸைச் சீண்டிய மோடி!

கடந்த காலத்தில் எதை விதைத்ததோ, அதையே காங்கிரஸ் அறுவடைசெய்கிறது என பிரதமர் மோடி விமர்சனம்செய்துள்ளார். 

ஜனாதிபதி உரைமீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், இன்று பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார். அப்போது, 'ஜனாதிபதி உரை இந்தியா முன்னேறி வருவதை எடுத்துரைத்தது. கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில், மற்ற நாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியா வளரவில்லை. ஒரு குடும்பத்தின் வளர்ச்சிகுறித்து மட்டுமே காங்கிரஸ் கவலைப்பட்டது. கடந்த காலத்தில் எதை விதைத்ததோ, அதையே காங்கிரஸ் அறுவடைசெய்கிறது. தங்களின் சுயநலத்துக்காக காங்கிரஸ் நாட்டை துண்டாக்கியது. ஒவ்வொரு நாளும், காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு 125 கோடி மக்கள் விலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ், ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் எங்களுக்கு இந்த அளவு வேலை இருந்திருக்காது. 

ஜனநாயகம் என்ன என்பதை நீங்கள் எங்களுக்கு கற்றுத் தர வேண்டாம். ஜனநாயகம் என்பது பா.ஜ.க-வினரின் ரத்தத்தில் ஊறியுள்ளது. காங்கிரஸ் கட்சியோ, நேருவோ ஜனநாயகத்தை உருவாக்கவில்லை. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளைக் கலைத்து, சட்டத்தை கேலிக்கூத்தாக்கிய காங்கிரஸ், ஜனநாயகம்குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது. வல்லபாய் படேல் மட்டும் முதல் பிரதமராக இருந்திருந்தால், ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவுடையதாக இருந்திருக்கும். மக்களுக்கான திட்டங்களை அறிவித்து, அதைச் சரியான நேரத்தில் நிறைவேற்றுவதில் மத்திய அரசு சிறப்பாகச் செயல்படுகிறது.' 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!