வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (07/02/2018)

கடைசி தொடர்பு:18:55 (07/02/2018)

தான் பிரதமர் என்பதையே மோடி மறந்துவிட்டார்! - கலகலத்த ராகுல்காந்தி விமர்சனம்

மோடி, அவர்தான் பிரதமர் என்பதை மறந்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் அரசைக் கடுமையா விமர்சித்தார். மேலும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை.

பிரதமர் மோடியின் மக்களவை உரைகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `நான் நினைக்கிறேன்... மோடி அவர்கள் அவர்தான் தற்போது பிரதமர் என்பதை மறந்துவிட்டார். கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். எப்போதும் எதிர்க்கட்சிகளையே விமர்சனம் செய்யக் கூடாது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மோடி பேசியுள்ளார். அதில், ரபேல் ஒப்பந்தம் குறித்தோ விவசாயிகள் குறித்தோ வேலைவாய்ப்பு குறித்தோ ஒரு வார்த்தைகூட இடம் பெறவில்லை. அவருடையே பேச்சு, முற்றிலும் அரசியல் மேடையில் பேசுவதுபோல பேசியுள்ளார்' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.