வெளியிடப்பட்ட நேரம்: 06:52 (09/02/2018)

கடைசி தொடர்பு:06:56 (09/02/2018)

இன்றைய பங்கு சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ்2581.00 (-100.66) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ்23860.46 (-1032.89) என்ற அளவிலும்வியாழனன்று நடந்த டிரேடிங்கின்இறுதியில் முடிவடைந்தது.  நியூயார்க் ஸ்பாட் சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1321.10 டாலர் என்ற விலையிலும், ப்ரெண்ட் குருடாயில் பீப்பாய் ஒன்றுக்கு 64.81 டாலர் என்ற அளவிலும்இருந்தது.

டாலரின் மதிப்பு ரூபாயில்

நேற்று அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 64.1616என்ற அளவில் இருந்தது.

நிஃப்டி எப்படி?

நேற்று வியாபார நேரத்தின் இறுதியில் நிப்டி10576.85  (+100.15) ல் முடிவடைந்தது. டெக்னிக்கலாக நிஃப்டி10492/10406/10346போன்ற லெவல்களை சப்போர்ட்டாகவும்,10650/10723/10783 போன்ற லெவல்களை ரெசிஸ்டென்ஸாகவும் கொண்டிருக்கின்றது.வியாழனன்று நிப்டி நல்லதொரு ஏற்றத்தினை சந்தித்து முடிவடைந்தது. ஆனால் வியாழனன்று அமெரிக்க சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளது. இன்றும் உலக சந்தைகள் சில ஆரம்பத்தில் வீழ்ச்சியுடனேயே ஆரம்பித்துள்ளன. அதனால் மீண்டும் சந்தையில் குழப்பம்வர வாய்ப்புள்ள்படியால் இன்றும் டெக்னிக்கல்கள் முழக்கமுழுக்க ஒர்க் அவுட் ஆகாமல் போய்விட வாய்ப்புள்ளது என்பதை டிரேடர்கள் மனதில் கொள்ளவேண்டும்.  மேலும்சந்தையின் சூழல் சற்று வாலட்டைலாக இருப்பதால் புதிய டிரேடர்களும், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்களும்இன்றைக்கு டிரேடிங் செய்வதை தவிர்ப்பது நல்லது எனலாம். இன்றுஷார்ட் சைட்மற்றும் ஓவர்நைட் வியாபாரத்தினை தவிர்ப்பது மிகமிக அவசியம்.இன்று கேப் ஒப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே வியாபாரம் செய்வது குறித்து பரிசீலனை செய்யவேண்டும்.சந்த இந்த திசையில் செல்ல வாய்ப்புள்ளது என்பதற்கான ஒரு க்ளூ கிடைக்காத வண்ணம் உலக சந்தைகளின் நடவடிக்கைகள் இருந்துவருகின்றன. அதனால்தெளிவானதொரு திசை தெரியும் வரை, அதாவதுஇரண்டொரு நாளைக்கு ஏற்றத்திலோ அல்லது இறக்கத்திலோதான்செல்லமுயல்கின்றது என்பதை காட்டும் சூழல் கண்ணுக்கு தெரிவது போல் செயல்பட்டு சந்தைஒரிருநாட்களுக்கு வாலட்டைலிட்டி குறைந்துசெட்டிலான பின்னரே அனைத்துவிதமான ரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடர்களும் டிரேடிங் செய்ய முயற்சிப்பது நல்லது.அதீதஎச்சரிக்கையுடன்செயல்படவேண்டிய சூழ்நிலை இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்?

08-02-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை  என்று பார்த்தால் 4,395.66கோடி ரூபாய்க்கு வாங்கியும், 6,692.75கோடி ரூபாய்  அளவிற்கு விற்றும் நிகர அளவாக 2,297.09கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.

உள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள்(டிஐஐ) என்ன செய்தார்கள்?

08-02-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 5,670.62கோடி ரூபாய்க்கு வாங்கியும்,3,297.03    கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 2,373.59கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.

டெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே!

குறிப்பிட்ட சில பங்குகளில் 08-02-18 அன்று நடந்தடெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூமின் அளவு அதிகரித்த விவரம். சந்தையில் வாலட்டைலிட்டி அதிகம் இருக்க வாய்ப்புள்ளபடியால் அனைத்துவிதமான டிரேடர்களும் டிரேடிங் செய்வதை இன்று தவிர்ப்பதே நல்லது எனலாம்.
 

ப்யூச்சர்ஸ் ஒப்பன் இண்ட்ரெஸ்ட் நிலவரம் –பிப்ரவரி மாத  எக்ஸ்பைரிக்கான காண்ட்ராக்ட்களில்

பிப்ரவரி மாத எக்ஸ்பைரிக்கான ப்யூச்சர்ஸ்களில்08-02-18 அன்று ஒப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்). சந்தையில் வாலட்டைலிட்டி அதிகம் இருக்க வாய்ப்புள்ளபடியால் அனைத்துவிதமான டிரேடர்களும் டிரேடிங் செய்வதை இன்று தவிர்ப்பதே நல்லது எனலாம்.

பல்க்கா வியாபாரம் நடந்திருக்கே!

08-02-18 அன்று நடந்த  ஒரு சில பல்க் டீல்கள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்)

உங்களுக்கு தெரியுமா - இந்த ஷேர்களில் 09-02-18 அன்று புதிய எப்&ஓ வியாபாரம்செய்யக்கூடாதுஎன்பது!

எப்&ஓ வியாபாரத்தில் புதிய வியாபாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்தனின் என்எஸ்சி சிம்பல்கள் தரப்பட்டுள்ளது. – 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால்.

FORTIS, GMRINFRA, HDIL, JISLJALEQS.

இன்றைய போர்டு மீட்டிங்குகள்

இன்று  போர்டு மீட்டிங்  நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்).

ABCAPITAL, AIFL, ALKEM, ANGIND, APCOTEXIND, APEX, ARMANFIN, ASHIANA, ASIL, AVANTIFEED, AVANTIFEED, BANKBARODA, BANKBARODA, BATAINDIA, BLKASHYAP, BPCL, BPCL, CAPACITE, CENTRALBK, CREATIVEYE, DCW, DECCANCE, DEEPIND, DLINKINDIA, DREDGECORP, DYNPRO, ENERGYDEV, GESHIP, GILLANDERS, GILLETTE, GLOBALVECT, GMDCLTD, GOCLCORP, GOLDENTOBC, GSCLCEMENT, GTNIND, HFCL, HFCL, HIMATSEIDE, HINDPETRO, HINDPETRO, HOTELEELA, IL&FSTRANS, INDIACEM, INDIANCARD, INTEGRA, JAGSNPHARM, JBCHEPHARM, JOCIL, KCPSUGIND, KITEX, LOKESHMACH, M&M, MAGNUM, MANGCHEFER, MARICO, MELSTAR, MFSL, MFSL, MGL, MOIL, MOLDTECH, NAGAFERT, NAGAROIL, NAGAROIL, NATIONALUM, NCLIND, NECLIFE, OIL, OIL, ONGC, ORIENTBANK, PATINTLOG, PNC, PRASGLOFIN, PRECOT, QUINTEGRA, RAMKY, RATNAMANI, RCF, REMSONSIND, RICOAUTO, ROSSELLIND, RSYSTEMS, SALZERELEC, SANGHVIMOV, SBIN, SBIN, SCHAND, SIS, SJVN, SMLISUZU, SOBHA, SONASTEER, STAR, STCINDIA, STEELXIND, SUNDARAM, SUNTV, SURANACORP, SUZLON, SWELECTES, SYNDIBANK, TATAINVEST, TATASTEEL, TECHNO, TECHNOFAB, TIL, TVSELECT, UCOBANK, UCOBANK, UGARSUGAR, UMESLTD, VISHNU, VSTTILLERS, WABAG, WINSOME.
*****

பொறுப்பு கைதுறப்பு:இந்தப்பகுதி ஒரு செய்தி தொகுப்பேயாகும்.  இந்தப்பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றிற்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை.  இந்த இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள் முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல.  பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  மேலும் இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பண ரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியினை படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாக படித்து தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவு எண்: INH200001384)


டிரெண்டிங் @ விகடன்