வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (09/02/2018)

கடைசி தொடர்பு:12:54 (10/02/2018)

`மிஸ்ஸான நிறுத்தற்குறி ' - நெட்டிசன்களால் விமர்சனத்துக்குள்ளான பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் `PMO India.' இந்த ட்விட்டர் பக்கத்திலிருந்து தட்டிய ட்வீட்டால் பிரதமர்  நரேந்திர மோடியைக் கடுமையாகக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

modi
 

கடந்த 7-ம் தேதி மோடியின் நாடாளுமன்ற மக்களவை உரை அதிகம் விமர்சிக்கப்பட்டது. காரணம் வழக்கத்தைவிட ஆவேசமாக மோடி பேசினார். காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார். இந்த நிதியாண்டின் பட்ஜெட்டில் ஏழை மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். `நாட்டில் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது என்று கூறினார். `இத்திட்டத்தின்படி, ஏழை எளிய மக்கள் ஆண்டுக்கு ரூ.5,00,000 வரை மருத்துவக் காப்பீடு பெறலாம். நாம் அனைவரும் சேர்ந்து ஏழை எளிய மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்று பேசினார்.

modi
 

மோடியின் உரையை ட்விட்டரில் பகிர்ந்த பிரதமர் அலுவலகம் `Let us work together in providing the poor quality and affordable healthcare: PM’ என்று பதிவிட்டது. `Poor’ என்ற வார்த்தைக்கும் `quality’ என்ற வார்த்தைக்கும் இடையே காற்புள்ளி (கமா) வந்திருக்க வேண்டும். ஆனால், மோடி அலுவலக ட்விட்டர் அட்மின் காற்புள்ளி வைக்காததால் அந்த வரியின் அர்த்தமே மாறிவிட்டது. ‘நாம் அனைவரும் இணைந்து ஏழை மக்களுக்குத் தரம் குறைவான மருத்துவம் கிடைக்க ஒத்துழைக்க வேண்டும்’ என்று மோடி பேசியதுபோல் அர்த்தம் மாறிவிட்டது. ஏற்கெனவே `பக்கோடா’ விவகாரத்தில் மோடி அரசை விமர்சித்து வந்த இணையவாசிகள், இந்த ட்வீட்டால் மேலும் அதிகமாகக் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க