மாலத்தீவு விவகாரத்தை தொலைபேசியில் பகிர்ந்துகொண்ட மோடி - ட்ரம்ப்!

பிரதமர் மோடியைத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளார். 

மாலத்தீவில் ஏற்பட்டிருக்கும் உச்சகட்ட அரசியல் குழப்பத்தினால், மாலத்தீவு அதிபர் யாமீன் அங்கு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். இதனால், மாலத்தீவு தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனிடையே, இந்த விவகாரத்தில் உதவுமாறு இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், மாலத்தீவு விவகாரம்குறித்து பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசி மூலமாக ஆலோசனை நடத்தினார். 

இதுகுறித்து வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாலத்தீவில் நிலவிவரும் அரசியல் குழப்பங்கள்குறித்து இருதலைவர்களும் ஆலோசித்தனர். ஜனநாயக முறையிலான நடவடிக்கைகளை மாலத்தீவில் நிலைநாட்டவும், இந்தியா-அமெரிக்கா இடையேயான வளர்ச்சி மற்றும் பாதுகாப்புகுறித்தும் இருவரும் ஆலோசித்தனர். இதுதொடர்பாக, ஏப்ரல் மாதத்தில் இரு நாடுகளுக்கி டையே நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதேபோல, ஆஃப்கானிஸ்தான் விவகாரத்தில் தொடர்ந்து தங்களது பங்களிப்பை மேற்கொள்ளவும் இருவர் தரப்பிலும் முடிவு எடுக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!