`துப்பாக்கியை எடுத்தோருக்குத் துப்பாக்கியால்தான் பதில்' யோகி ஆதித்யநாத் அதிரடி!

துப்பாக்கி எடுத்தோருக்கு துப்பாக்கியால்தான் பதில் கூற முடியும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேசத்தில் சமீபகாலமாக ரவுடியிஸம் அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்த என்கவுண்டர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் என்கவுன்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில் துப்பாக்கி, குண்டுகள் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்குத் துப்பாக்கி மூலமே பதில் தரப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோரக்பூரில் நடந்த கூட்டத்தில் பேசிய யோகி, "துப்பாக்கி, குண்டுகள்மீது நம்பிக்கை உள்ளவர்களுக்குத் துப்பாக்கி மூலமே பதில் தரப்படும். அமைதியைச் சீர்குலைப்பவர்கள் மீது என்கவுன்டர் நடத்துவது குறித்து அதிகாரிகள் கவலைப்பட வேண்டாம். துப்பாக்கியால் பதில் அளிப்பது அவசியமானதும்கூட. உத்தரப்பிரதேச மக்கள் அனைவருக்கும் தகுந்த பாதுக்காப்பு அளிக்கப்படும்" என்றார். முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் கடந்த 25 நாள்களில் நடந்த 60 என்கவுன்டர்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!