நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரக் குறியீட்டில் தமிழகத்துக்கு 3-வது இடம்! | NITI Aayog's Health Index: Kerala, Punjab and TN among top performers

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (10/02/2018)

கடைசி தொடர்பு:10:11 (10/02/2018)

நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரக் குறியீட்டில் தமிழகத்துக்கு 3-வது இடம்!

Niti

நிதி ஆயோக் அமைப்பு நாடு முழுவதும் மருத்துவத்தரம், சுகாதார நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்து ஒரு சுகாதாரக் குறியீட்டை வகுத்துள்ளது. அதில் அதிகப் புள்ளிகள் பெற்று கேரள மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. பஞ்சாப் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் சிறப்பாக முன்னேற்றம் கண்டுவரும் மாநிலங்களாக ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் கடந்த காலங்களில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது. தடுப்பூசி மருந்துகள் பரவலாக அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் இந்தப் பட்டியலின் கீழ் நிலையில் உள்ளன.

சிறிய மாநிலங்களில் மிசோரம், மணிப்பூர், கோவா ஆகியவை மிகச்சிறந்த தரக்குறியீட்டைப் பெற்றுள்ளன. யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை லட்சத்தீவு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. 


[X] Close

[X] Close