’’கர்நாடகாவில் ஊழல் செய்து உலகச் சாதனை படைத்தது பா.ஜ.க!’’ - ராகுல்காந்தி விளாசல்

224 தொகுதிகளுக்கான கர்நாடக மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதையொட்டி பா.ஜ.கவும், ஆளும் காங்கிரஸும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

சமீபத்தில் பெங்களூரு வந்த மோடி, பிரசாரத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று (11.2.2018) வட கர்நாடக பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். ராகுல்காந்தியின் பிரசாரத்திற்காக தனிப் பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பேருந்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் தொண்டர்களைச் சந்தித்தார். 

அப்போது, "கடந்த 5 வருடங்களாக சித்தராமையா தலைமையில் ஊழலற்ற ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஆனால் இதற்கு முன்னர் இருந்த பா.ஜ.க. ஆட்சி ஊழலில் உலக சாதனை படைத்தது. பா.ஜ.க. ஆட்சியில் ஒன்றன் பின் ஒன்றாக ஊழல் வெளிவந்தது. அதனால்தான் 5 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சியில் 3 முதல்வர்கள் பதவியேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் பிரதமர் மோடி இங்கு வந்து ஊழல் பற்றி பேசுகிறார். விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் கர்நாடக அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து முன்னோடியாக திகழ்கிறது. இதுதான் காங்கிரஸுக்கும் பா.ஜ.கவுக்கும் உள்ள வித்தியாசம். எனவே வரவிருக்கும் தேர்தலில் மக்கள் பணியாற்ற காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!