வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (11/02/2018)

கடைசி தொடர்பு:20:00 (11/02/2018)

``36 மணி நேரம் நீடித்த ராணுவ முகாம் தாக்குதல் முடிவுக்கு வந்தது!’’ - 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராணுவ முகாமில் நுழைந்து ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சுமார் 36 மணி நேரத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது. 


சுஞ்சுவான் பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குள் ஆயுதங்களுடன் நேற்று (10.2.2018) நுழைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள், அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். ராணுவ வீரர்கள் சீருடையில் முகாமுக்குள் நுழைந்த தீவிரவாதிகளிடம் கையெறி குண்டுகள், அதிநவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 4.55 மணியளவில் ராணுவ முகாமுக்குள் நுழைந்த தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், நேற்று இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரவு நேரத்தில் சண்டை ஓய்ந்திருந்தது.

ராணுவ முகாமிற்குள் மேலும் சில தீவிரவாதிகள் இருக்கலாம் என்ற எண்ணத்தில் இன்று மீண்டும் தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டனர். இதில், மேலும் ஒரு தீவிரவாதி ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டான். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும், பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதேபோல், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராணுவத் தளபதி பிபின் ராவத், ஆய்வு மேற்கொண்டார்.