`குப்பைத்தொட்டியில் கிடந்த நாப்கினைப் பயன்படுத்திய சிறுமிகள்!’ - தம்பதியின் மனதை உலுக்கிய காட்சி | Story behind Surat's 'Pad couple’

வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (13/02/2018)

கடைசி தொடர்பு:19:02 (13/02/2018)

`குப்பைத்தொட்டியில் கிடந்த நாப்கினைப் பயன்படுத்திய சிறுமிகள்!’ - தம்பதியின் மனதை உலுக்கிய காட்சி

pad couple

பெண்களுக்கு, குறைந்தசெலவில் நாப்கின்கள் தயாரித்த கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கை  ‘பேட்மேன்’ என்னும் பாலிவுட் படமாக வெளிவர இருக்கிறது. இதேபோன்று,  குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் ஆரோக்கியமான நாப்கின் தயாரித்து ஏழை எளிய பெண்களுக்கு இலவசமாகக் கொடுத்துவருகிறது ஒரு தம்பதி.

சூரத்தின் 'Pad Couple' என்று அழைக்கப்படும் மீனா - அதுல் மேதா தம்பதி, கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் 5000 சானிட்டரி நாப்கின்களை ஏழை எளிய பெண்களுக்கு வழங்கிவருகின்றனர்.

pad couple
 

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய மீனா, ’நாப்கின்களை நாங்கள் இலவசமாக வழங்கிவருவதற்கு இரண்டு சிறுமிகள்தான் காரணம். சில ஆண்டுகளுக்கு முன்பு, 14 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள்,  என் வீட்டின் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்த நாப்கின்களைச் சேகரிப்பதைக் கவனித்தேன். அவர்களை அழைத்து, எதற்காக இந்த நாப்கின்களை எடுத்துச்செல்கிறீர்கள் என்றேன். அதற்கு அந்தச் சிறுமிகள் சொன்ன பதில் என்னை நிலைக்குலையச் செய்தது. 'நாங்கள், இதை நீரில் அலசிவிட்டுப் பயன்படுத்திக் கொள்வோம். எங்கள் வீட்டில் நாப்கின் வாங்குமளவுக்குப் பணமில்லை. மாதவிடாய் சமயங்களில் துணியைப் பயன்படுத்தலாம் என்றால், அதற்கும் வழியில்லை. இதனால், பயன்படுத்திய நாப்கின்களை குப்பைத் தொட்டியிலிருந்து சேகரித்து, நீரில் அலசி உலர்த்திய பின்னர் பயன்படுத்துவோம்' என்றனர். இதனால், நானும் என் கணவரும் ஒவ்வொரு மாதமும் அருகிலிருக்கும் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று, பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்கிவருகிறோம்’ என்றார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க