வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (14/02/2018)

கடைசி தொடர்பு:17:06 (14/02/2018)

கேரளாவிலும் பேருந்துக் கட்டணம் உயர்கிறது! - குறைந்தபட்ச கட்டணம் 8 ரூபாய்

 

கேரளா பஸ்

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், கேரளாவிலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் சாதாரண பஸ்களில் ரூ.7-லிருந்து 8 ஆக உயர்கிறது. அதிவேகப் பேருந்துகளில் கட்டணம் ரூ.10-லிருந்து 11 ஆக உயர்த்தப்படுகிறது. சூப்பர் எக்ஸ்பிரஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 20-லிருந்து 22 ஆகவும், ஏ.சி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.44 ஆகவும், வால்வோ ஏ.சி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்தபட்ச கடடணத்தை ரூ.10 ஆக உயர்த்த வேண்டுமென்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், குறைந்தபட்ச கட்டணம் ரூ.8 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த உயர்வு மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கேரள அரசு இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியிருந்தது. கட்டண உயர்வு பற்றி கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறும்போது, “கட்டணத்தை உயர்த்துவதில் எங்களுக்கும் உவப்பில்லை. ஆனால், நடைமுறை செலவினங்கள் அதிகரித்து வருவதால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது” என்றார்.