திறந்தவெளியில் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை அமைச்சர்!

ராஜஸ்தானில் சுகாதாரத்துறை அமைச்சர் திறந்தவெளியில் சிறுநீர் கழித்த செயலுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சுகாதாரத்துறை அமைச்சர் காளிச்சரண் சாரப்

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் காளிச்சரண் சாரப். இவர் சமீபத்தில் தோல்பூர் இடைத்தேர்தல் பணிக்காகச் சென்றுகொண்டிருக்கும் காரை நிறுத்தி பொதுவெளியில் சிறுநீர் கழித்தார். அமைச்சரின் இந்தச் செயல் சமுக வலைதளங்களில் கண்டனத்துக்குள்ளானது. மேலும், இவரது செயலுக்கு விளக்கம் கேட்டு ராஜஸ்தான் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

எனினும் இது ஒன்று பெரிய பிரச்னை இல்லை என்றும், இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சரின் இந்தச் செயலுக்கு மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர், ரகு சர்மா கூறியதில், "காளிச்சரண் சாரப் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. சுகாதாரத்துறை அமைச்சரே இவ்வாறு செய்ததற்கு மாநில அரசு வெட்கப்பட வேண்டும். அமைச்சர் இந்த விஷயத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார். தூய்மை இந்தியா திட்டத்தை வெகுவாகச் செயல்படுத்தி வரும் பா.ஜ.க அரசின் அமைச்சரே பொதுவெளியில் சிறுநீர் கழித்த சம்பவம்  சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!