வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (15/02/2018)

கடைசி தொடர்பு:14:49 (16/02/2018)

மார்ச் 7-ல் `ஜிப்மர்’ நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும்

`நீட்’ தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள `ஜிப்மர்’ மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ் படிப்பில் உள்ள மாணவர் இடங்களுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது. 

jipmer

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ஜ் (ஜிப்மர்) கல்வி நிறுவனம், இந்தியாவில் முன்னணி கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது. இங்கு எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பில் உள்ள 200 மாணவர் இடங்கள் ஜிப்மர் நடத்தும் நுழைவுத்தேர்வு மூலமாக நிரப்பப்படுகிறது. 

200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதியில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் மார்ச் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது. 

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் `நீட்’ நுழைவுத் தேர்வு வழியாக மட்டுமே மாணவர் இடங்கள் நிரப்பப்படுகின்றன. இருப்பினும், புதுடெல்லி, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் செயல்படும் ஆல் இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (எய்ம்ஸ்) மற்றும் ஜிப்மர் ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரிகள் மட்டும் தனித்தனியே நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. இத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றன.