ஒடிசாவில் தாக்கப்பட்ட தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரி!

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகப் பணியாற்றி வரும் கார்த்திகேயன் பாண்டியன் ஐ.ஏ.எஸ் மீது பா.ஜ.க-வை சேர்ந்த நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் வேற்று மாநிலத்தவர் என்று அடையாளம் கூறப்பட்டு, அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. ஒடிசா மாநில அரசில் தனிக்கவனம் பெற்றுள்ள கார்த்திகேயன் பாண்டியன், மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர். 2000-ம் ஆண்டு இந்திய குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகப் பணி ஆற்றுகின்றார். 

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வசித்து வரும் கார்த்திகேயன் பாண்டியன் வீட்டின்மீது, சாணத்தைக் கரைத்து ஊற்றியும் பூந்தொட்டிகளை உடைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். புவனேஸ்வர் நகர பா.ஜ.க தொண்டர்கள்தாம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராகப் பணியாற்றி வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திரா பிரதான், இச்சம்பவம் குறித்து ’ஒடிசா மக்களின் வரிப்பணத்தில் இருந்து மாத ஊதியம் பெறும் அரசு ஊழியரான பாண்டியன், ஒடிசா மக்கள் போராடத் தயங்க மாட்டார்கள் என்று கருதிவிட வேண்டாம்’ என தனது கோபத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க. மத்திய அமைச்சர் ஒருவரே இந்தத் தாக்குதலைக் கண்டிக்காமல் நியாயப்படுத்திப் பேசியிருப்பது, இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பா.ஜ.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதைக் காட்டுகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!