ஓடும் பேருந்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை! - களமிறங்கிய டெல்லி போலீஸ் | Delhi Police announce reward for anyone who gives information about the man

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (17/02/2018)

கடைசி தொடர்பு:12:52 (17/02/2018)

ஓடும் பேருந்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை! - களமிறங்கிய டெல்லி போலீஸ்

தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியின் அருகில் அமர்ந்து ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

delhi man
 

கடந்த 7-ம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்துகொண்டிருந்த நபர் திடீரென ஆபாச செயலில் ஈடுபடத் தொடங்கினார். அதைப்பார்த்த மாணவி அதிர்ச்சியில் உறைந்தார். முதலில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த மாணவி, பின்னர் சுதாரித்துக்கொண்டு தன் போனில் அந்த நபரை படம் எடுத்து வைத்துக்கொண்டார். அருகில் இருந்தவர்கள் யாரும் நடந்தவற்றைக் கண்டுகொள்ளவில்லை. அந்த மாணவி வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர, பெரும் சர்ச்சை வெடித்தது. மாணவி அந்த நபர்மீது காவல்துறையில் புகார் அளித்தார். அந்த நபர் மீது பாலியல் துன்புறுத்தல், பொதுஇடத்தில் ஆபாச செயலில் ஈடுபடல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, ‘பேருந்தில் என் அருகே அமர்ந்துகொண்டிருந்த நபர் என்னை உரசினார். நான் சற்று தள்ளி அமர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் அருவருப்பான செயலில் ஈடுபடத் தொடங்கினார். நான் சத்தம் போட்டேன். பேருந்தில் பயணம் செய்த யாரும் உதவிக்கு வரவில்லை. அந்த நபரைக் கண்டிக்கவில்லை. அடுத்த பேருந்து நிறுத்தம் வந்ததும் இறங்கி ஓடிவிட்டார். என் பெற்றொரிடம் சொன்னதும் காவல்துறைக்கு எல்லாம் போக வேண்டாம் என்றனர். அதனால் நான் எடுத்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து டெல்லி போலீஸ், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர், முதல்வர்  கெஜ்ரிவால் மற்றும் சில அதிகாரிகளையும் டேக் செய்தேன். பின்னர் கடந்த 10-ம் தேதி வசந்த் விஹார் காவல் நிலையத்தில் புகார் செய்தேன்’ எனக் குறிப்பிட்டார்.

தற்போது ஓடும் பேருந்தில் அருவருப்பான செயலில் ஈடுபட்ட அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள டெல்லி போலீஸ், அவரைப் பற்றித் தகவல் கொடுப்பவருக்கு ரூ.25,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க