ஆதார் திட்டத்துக்கு கிடைத்த விருது! | India’s Aadhaar and Umang App have won awards

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (17/02/2018)

கடைசி தொடர்பு:16:27 (17/02/2018)

ஆதார் திட்டத்துக்கு கிடைத்த விருது!

துபாயில் நடைபெற்ற 6-வது உலக உச்சி மாநாட்டில், இந்தியாவின், `ஆதார் மற்றும் உமாங் ஆப்’ திட்டத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆதார் திட்டத்திற்கு எதிராக, தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இவ்விருது  கிடைத்திருப்பது மத்திய அரசுக்குச் சாதனையாக அமைந்துள்ளது. ஆதார் திட்டத்தில் இந்தியா எடுத்த முயற்சி, தொழில்நுட்ப துறையில் அரசின் சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் ஆதார் எண்ணை இந்தியா முழுவதும் ’டிஜிட்டல்’ முறையைச் செயல்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 

பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை ஆதார் எண்ணை, மத்திய அரசு கட்டாயப்படுத்தி உள்ளது. ஆதார் அடையாள அட்டை மூலம் சாமானியர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும், பலரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஆதார் வழக்கு நிலுவையில் உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்ட உச்சி மாநாட்டில் அமீரக துணைப் பிரதமர், இந்திய அரசின் ஆதார் திட்ட உதவி பொது இயக்குநர் கதிர் நாராயணாவிடம் விருதுக்கான சான்றிதழை வழங்கினார்.