மக்கள் முன் நிறுத்தி ஊழல் அதிகாரியை அதிரவைத்த மேனகா காந்தி!

ஊழல் மற்றும் முறைகேடு புகாரில் சிக்கிய அதிகாரியை மத்திய அமைச்சர் மேனகா காந்தி பொதுமக்கள் முன் கடிந்துகொண்டுள்ளார். 

மேனகா காந்தி

மத்திய அமைச்சரவையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருப்பவர் மேனகா காந்தி. இவர் நேற்று உத்தரபிரதேச மாநிலம் பஹேரியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, மனுக்களை பெற்றுக்கொண்டிருக்கும் போது அங்கிருந்த அதிகாரி மீது பொதுமக்கள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினர். இதைக்கேட்ட மேனகா காந்தி அந்த அதிகாரியை நிற்கவைத்து திட்ட ஆரம்பித்தார். மிகவும் கடுமையான வார்த்தைகளால் தொடர்ந்து திட்டிய அவர், பொதுமக்கள் வாழ்க்கையை, பணத்தை வைத்து தீர்மானிக்காதீர்கள் என்றும் கூறினார். மேலும், நல்ல நிர்வாகத்தை தந்தால்தான் அடுத்த முறை மக்களிடம் சென்று வாக்கு கேக்க முடியும் அதை உணர்ந்து செயல்படுங்கள் என்றும் அவர் கூறினார். 

இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஊழலுக்காக அதிகாரியைக் கடிந்துகொண்டாலும் அவர் பயன்படுத்திய வார்த்தைக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஊழலுக்கு எதிராக கருத்துக் கூறி சர்ச்சையில் சிக்குவது மேனகா காந்திக்கு இது முதல் முறையல்ல. இதேபோல் கடந்த வருடம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பிலிபட் தொகுதி எம்எல்ஏவை கடுமையாக வசைபாடியது அப்போது சர்ச்சையை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!