``2012 - 16 இடைப்பட்ட 4 ஆண்டுகளில் மோசடியால் பொதுத்துறை வங்கிகள் இழந்த தொகை எவ்வளவு தெரியுமா?’’ | PS banks incur 22,743 Cr loss to banking frauds between 2012 and 2016 says Ravi shankar prasad

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (18/02/2018)

கடைசி தொடர்பு:00:00 (18/02/2018)

``2012 - 16 இடைப்பட்ட 4 ஆண்டுகளில் மோசடியால் பொதுத்துறை வங்கிகள் இழந்த தொகை எவ்வளவு தெரியுமா?’’

கடந்த 2012 முதல் 2016 வரையிலான 4 ஆண்டு காலகட்டத்தில் மோசடியால் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் ரூ.22,743 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அளித்த அறிக்கையை மேற்கோள்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவுக்கு நீரவ் மோடி என்பவர் மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மோசடிக்கு வங்கி அதிகாரிகள் துணை போனதாகக் கூறப்படுகின்ற வேளையில், காங்கிரஸும் பா.ஜ.க-வும் இந்த விவகாரத்தில் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, மோசடி நடவடிக்கைகளால் பொதுத்துறை வங்கிகளில் ரூ.22,743 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசிய அவர், "2016 -17-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் ஐசிஐசிஐ வங்கியில் 455 மோசடி புகார்களும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 429 புகார்களும், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியில் 244 புகார்களும், எச்டிஎப்சி வங்கியில் 237 புகார்களும் வந்துள்ளன.  

இதேபோல், 2016-ம் ஆண்டு ஏப்ரல் - டிசம்பர் மாத காலகட்டத்தில் மொத்தம் ரூ.17,700 கோடி அளவுக்கான 3,870 மோசடி புகார்கள் வந்துள்ளன. இவற்றில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில், அதிகபட்சமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 64 ஊழியர்கள், எச்டிஎப்சி வங்கியின் 49 ஊழியர்கள், ஆக்ஸிஸ் வங்கியின் 35 ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மோசடியில் ஈடுபட்டதற்கான சில ஆதாரங்களும் கிடைத்துள்ளன. மேலும் 95 சதவிகித மோசடிகள் பெரிய அளவிலான வர்த்தக வங்கியில் நடந்துள்ளது" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close