வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (18/02/2018)

கடைசி தொடர்பு:08:30 (18/02/2018)

'25 ஆண்டுகால ஆட்சியை அசைக்குமா பாஜக?'- திரிபுராவில் தேர்தல் தொடங்கியது

திரிபுராவில் 59 சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 

திரிபுரா தேர்தல்

வடகிழக்கு மாநிலமான திரிபுரா பின்தங்கிய மாநிலமாக அறியப்படுகிறது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்றுவருகிறது. தொடர்ந்து 4 முறை அம்மாநில முதல்வராக மாணிக் சர்க்கார் பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில், மொத்தம் 60 தொகுதிகள் கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு இன்று 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு தொகுதிக்கு மட்டும் அடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாநிலம் என்பதால் அவர்கள் போட்டியிடுவதற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையே திரிபுராவில் காலூன்ற பாஜக கடுமையாக முயற்சி செய்து வருகிறது. 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை அசைக்க திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியில் குதித்துள்ளது. இதற்காக சமீபத்தில் பிரதமர் மோடி திரிபுராவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்தபடியாக திரிபுராவில் பலம் வாய்ந்த தேசியக் கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது. இதன்காரணமாக இந்தமுறை காங்கிரஸ் தனித்து களமிறங்கியுள்ளது.  இதனால் இந்தத் தேர்தல் அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்காருக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை இழக்குமா அல்லது தக்கவைத்து கொள்ளுமா என்பதை மார்ச் 3ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துகொள்ள முடியும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க