வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (19/02/2018)

கடைசி தொடர்பு:08:55 (19/02/2018)

கோவா முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..! நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை, பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்தார். 

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உணவு ஒவ்வாமை காரணமாக மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மும்பையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றிருந்தார். அதன்பிறகு, நேற்று இரவு மும்பை லீலாவதி மருத்துவமனைக்குச் சென்று மனோகர் பாரிக்கரை சந்தித்து உடல்நலம் விசாரித்துச் சென்றார்.