ரூ.11,400 கோடி மோசடி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சீல் - சிபிஐ அதிரடி!

ரூ.11,400 கோடி மோசடிக்கு உள்ளான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  

பஞ்சாப் நேஷனல் வங்கி

இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், ரூ.11,400 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி அதிகாரிகள் துணையுடன் பிரபல தொழில் அதிபரும் வைர வியாபாரியுமான நிரவ் மோடி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பெரும் செல்வந்தராக அறியப்பட்ட இவர், அம்பானியின் உறவினர் ஆவார். உலகம் முழுவதும் வைர நகைக்கடைகளை நடத்திவரும் இவருக்கு, பல உலகத் தலைவர்களுடன் தொடர்பு உள்ளது. இந்த நிலையில், மோசடிகுறித்த தகவல் வெளியானதும் அவர் தலைமறைவாகிவிட்டார். நாட்டின் மிகப்பெரிய வங்கியில் முறைகேடு நடந்துள்ள சம்பவம், வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸும் பா.ஜ.க-வும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும், நிரவ் மோடி, அவர் குடும்பத்தினர் மற்றும் மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரிகள்மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளான மும்பை எம்சிபி பிரெடி ஹவுஸ் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இன்று சீல் வைக்கப்பட்டது. மோசடி செய்த நிரவ் மோடிக்கு, இந்த வங்கிக் கிளையில் இருந்தே உத்தரவாதம் தரப்பட்டது என்பதால், வங்கிக் கிளைக்கு சீல் வைத்து சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!