நிரவ் மோடி நிறுவனங்கள் கடன் பொறுப்பேற்புக் கடிதம் பெற உதவிய வங்கி அதிகாரிகள்!

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியின் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் நிரவ் மோடிக்குச் சொந்தமான நிறுவனங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாகக் கடன் பொறுப்பேற்பு கடிதம் பெற்றுள்ளன. 

இந்தியாவின் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்துள்ளார். பொதுவாக, வங்கியில் கடன் பெற வீடு, கார் அல்லது ஏதேனும் ஒரு சொத்துகளை அடமானம் வைத்துதான், கடன் பெற இயலும். நிரவ் மோடி வாங்கிய கடன் தொகைக்கு, எந்தவித சொத்துகளையும் அடமானமாக வைக்கவில்லை மற்றும் மார்ஜின் பணம் எதுவும் செலுத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பெயரில் வழங்கப்பட்ட கடன் தொகைக்கு, ’லெட்டர் ஆப் அண்டர்டேக்’ எனும் கடன் பொறுப்பேற்புக் கடிதத்தை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக வங்கி அதிகாரிகள் மூலம் நிறுவனங்கள் பெற்றுள்ளன.

மேலும், கடன் பொறுப்பேற்புக் கடிதங்கள் வழங்கப்பட்டது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோர் பேங்கிங் சிஸ்டத்தில் தெரிவிக்கப்படவில்லை. அதனால், உள் தணிக்கை மற்றும் வெளித் தணிக்கையில் மோசடி நடந்திருப்பது தெரியவில்லை என்று, வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!