ரூ.800 கோடி கடன் பெற்ற விக்ரம் கோத்தாரி கைது

ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ 800 கோடி கடன் பெற்றுள்ள விக்ரம் கோத்தாரி, அக்கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அவர் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். 

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.485 கோடி, அலகாபாத் வங்கியில் ரூ.352 கோடி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில், கோடிக்கணக்கில் கடன் பெற்ற விக்ரம் கோத்தாரி, அக்கடன் தொகை மற்றும் வட்டியை திரும்பச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதிற்காக அவரை, சி.பி.ஐ., அதிகாரிகள், கான்பூரில் கைது செய்தனர். 

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் அவருக்குச் சொந்தமான, ரோட்டோமேக் பேனா நிறுவனம் கடந்த ஒரு வாரமாக பூட்டிக் கிடந்தது. அதனால், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவரைக் கைது செய்து, விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர் சி.பி.ஐ அதிகாரிகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!