வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (19/02/2018)

கடைசி தொடர்பு:16:40 (19/02/2018)

மோடி மௌனம் காப்பது ஏன்..? ராகுல் கேள்வி

'வங்கி மோசடிகள்குறித்து இரண்டு நிமிடம் செலவிட்டு, பிரதமர் மோடி பேச மறுப்பது ஏன்' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. 

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, எவ்வாறு தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என இரண்டு மணி நேரம் செலவழித்து அறிவுரை வழங்கும் மோடி அவர்கள், தொடர்ந்து நடைபெற்றுவரும் வங்கி மோசடிகுறித்து இதுவரை பேசாமல் மௌனம் காத்துவருகிறார். 

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடிகுறித்தும், நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியும் தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை. அதனால், வங்கி மோசடிகளில் பா.ஜ.கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது என ராகுல் தெரிவித்துள்ளார். 

 கடந்த ஐந்து ஆண்டுகளில், வங்கி மோசடியில் தொடர்புடையவர்களின் வெள்ளைக் காகிதப் பட்டியல்களை, விரைவில் மத்திய அரசு வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது எனவும் ராகுல் தெரிவித்தார்.