`என் மீதான வழக்குகளை ரத்து செய்க' - உச்ச நீதிமன்றத்தில் பிரியா வாரியர் மனு!

தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  

பிரியா பிரகாஷ் வாரியர்

மலையாளத் திரைப்படமான 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாடல் வெளியானது. இந்தப் பாடல் வெளியான சில மணி நேரங்களிலே மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்தன. இதற்கு காரணம் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இந்தப் பாடலில் சில நிமிடங்கள் தோன்றி மறைந்தாலும், தனது முக பாவனைகளால் லட்சக்கணக்கான இளவட்ட ரசிகர்களைப் பிரியா கவர்ந்துள்ளார். இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இவருக்கென தனி ரசிகர்களை உண்டாக்கியது. தினமும் இவர் குறித்த ட்ரோல் வீடியோக்கள், இவர் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் பெரிய நடிகர்களுக்குக் கிடைத்த வரவேற்பைவிட சில நாள்களிலேயே இவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கிடைத்தார்கள். 

இந்த நிலையில், இந்தப்பாடல் இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது எனக் கூறி, படத் தயாரிப்பாளர் மற்றும் பிரியா பிரகாஷ் மீது ஹைதராபாத் மற்றும் மகாராஷ்ட்ராவில் வழக்கு தொடுக்கப்பட்டது. மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகப் பிரியா மீது புகார் தொடுக்கப்பட்டது, சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என தற்போது பிரியா வாரியர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து இன்று பிரியா சார்பில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!