``வீடியோ காலின்போது நண்பர் முன்னிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட எம்.பி.ஏ மாணவி!’’

ஹைதராபாத்தில் நண்பருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்தபோதே, எம்.பி.ஏ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹனிஷா சௌடாரி. ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ படித்து வரும் அவர், கொலப்பள்ளியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். 24 வயதான ஹனிஷா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தனது ஆண் நண்பருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். 

அப்போது அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வாக்குவாதமானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆண் நண்பர் முன்னிலையிலேயே ஹனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். வீடியோ காலில் இருந்த நண்பர் இதைக் கவனிக்கவே, அவரைக் காப்பாற்ற விடுதிக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு தாழிடப்பட்டிருந்த ஹனிஷாவின் அறைக் கதவை உடைத்து, தூக்கில் தொங்கிய நிலையில் அவரை மீட்டு விடுதி உரிமையாளர்கள் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஹனிஷாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஹைதராபாத் போலீஸார்,  ஹனிஷாவின் செல்போனைத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!