எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம்செய்த ரயில்வே அமைச்சர்! | Railway Minister Piyush Goyal travels in Mysuru's Kaveri Express

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (20/02/2018)

கடைசி தொடர்பு:08:30 (20/02/2018)

எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம்செய்த ரயில்வே அமைச்சர்!

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம்செய்து குறைகளைக் கேட்டார். 

பியூஷ் கோயல்

ரயில்வே திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக, கர்நாடக மாநிலம் மைசூரு சென்றுள்ளார் பிரதமர் மோடி. அவருடன் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னதாகத் திடீரென மைசூரு ரயில் நிலையம் சென்ற பியூஷ் கோயல், அங்கிருந்த மைசூரு - பெங்களூரு இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். பெர்த் கிளாஸில் பயணம்செய்த அவர், அங்கிருந்த பயணிகளிடம் உரையாடி குறைகளைக் கேட்டறிந்தார். 

மேலும், ரயில்வே பெட்டிகளில் கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஆய்வுசெய்தார். அமைச்சரின் ஆய்வுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு காணப்பட்டது. மேலும், பயணிகள் பலரும் அவருடன் போட்டி போட்டுகொண்டு செல்ஃபி எடுத்தனர். முன்னதாக, நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய மோடி, 'மைசூரு மக்களுக்காக முக்கிய ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏழைகளின் ரயில் தேவைகளைப் பூர்த்திசெய்ய முயன்றுவருகிறோம். இதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் ரயில்வே மேம்பாட்டுக்காக வேலை செய்துவருகிறோம்' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க