வகுப்பறையில் தகாத வார்த்தை! சிக்கிய பேராசிரியர்; விடுதலை செய்த நீதிபதி

மும்பை மாநில அரசு எடுத்து நடத்தும், நர்ஸிங் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர், வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருக்கையில், `செக்ஸ்’ என்ற பாலியல் வார்த்தையைப் பலமுறை பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும், தனது தேன்நிலவு அனுபவங்களை மாணவிகளிடம் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தான் கைப்பட எழுதிய, தனது தேன்நிலவு அனுபவங்களைக் குறித்த ‘டைரி’ ஒன்றைப் படிக்க மாணவிகளைக் கட்டாயப்படுத்தியுள்ளார். 

பலமுறை ரமேஷ் பான்ரேவை எச்சரித்தும், தனது நடத்தையில் இருந்து மாறாமல் தொடர்ந்து, மாணவிகளிடம் பாலியல் குறித்துப் பேசி வந்துள்ளார். இந்நிலையில், நர்ஸிங் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர், இவர் மீது புகார் அளித்துள்ளார். அதில், ரமேஷ் பான்ரே மாணவிகளிடம் பாலியல் சம்பந்தமான தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். இவருக்கு, வார்டு பாய் முதல் பிற ஆசிரியர்களுடன் தொடர்பு இருக்கிறது எனப் புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

காவல்துறையினர் ரமேஷ் பான்ரே மீது வழக்குப்பதிவு அவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, பேராசிரியர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்விலும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இத்தகைய தவறுகளை மீண்டும் அவர் செய்யக் கூடாது என்று எச்சரித்து விடுதலை செய்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!