`இப்படி ஒரு கேஸை பார்த்ததேயில்லை' - பாம்பின் தலையைக் கடித்துத் துப்பியவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில், விவசாயி ஒருவர் தன்னைக் கடித்த பாம்பின் தலையைக் கடித்தே துண்டித்துள்ளார். 

பாம்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயில், விவசாயி ஒருவர் தனது பண்ணையில் வேலைசெய்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த பாம்பு ஒன்று அவரைக் கடித்துவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அந்தப் பாம்பின் தலையைக் கடித்துத் துண்டித்துள்ளார். பின்னர், பாம்பு கடித்ததால் மயக்கமடைந்த விவசாயிக்கு, உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் விவசாயியின் உடல்நிலை சீராக உள்ளது. 

பாம்பைப் பார்த்து பயப்படுவதற்குப் பதில், அந்தப் பாம்பை திருப்பிக் கடித்துள்ளது பற்றி விவசாயிக்கு சிகிச்சையளித்த டாக்டர் கூறுகையில், 'நான் இதுவரை இப்படி ஒரு கேஸை பார்த்ததில்லை. பாம்பைக் கடித்த பின்பும் அவர் நன்றாக இருக்கிறார். அவர் உடலில் நல்ல எதிர்ப்புசக்தி இருக்கிறது. இதனால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என ஆச்சர்யமாகத் தெரிவித்தார். எனினும், பாம்பின் தலையை விவசாயி கடித்தது குறித்து மதுகஞ்ச் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாம்பைப் பார்த்தால் அனைவரும் பயந்து ஓடுபவர்களிடையே, பாம்பின் தலையைக் கடித்துத் துண்டாக்கிய விவசாயி குறித்த செய்தி, தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!