ஒடிசா முதல்வர்மீது மீண்டும் செருப்பு வீச்சு!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பங்கேற்றுப் பேசிய அரசியல் பொதுக் கூட்டத்தில், அவர்மீது செருப்பை வீசியுள்ளார், கூட்டத்தில் பங்கேற்ற நபர் ஒருவர்.

ஒடிசா மாநிலம் பர்கார்க் மாவட்டத்தில் உள்ள பீஜிப்பூர் சட்டசபைத் தொகுதிக்கு, வரும் 24-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிடும் ஜனதா தள கட்சி வேட்பாளர் ரீடா சகு, கும்பிஹரி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரை ஆதரித்து, வாக்கு சேகரிக்கும் பிரசார பொதுக் கூட்டத்தில் நவீன் பட்நாயக் பங்கேற்றுப் பேசியுள்ளார். 

நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில், முதல் வரிசையில் அமர்ந்திருந்த நபர், நவீன் பட்நாயக் பேசி கொண்டிருக்கும்போது, தனது காலணிகளைக் கழற்றி முதல்வர்மீது வீசியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத முதல்வர், சுதாரித்து விலகியுள்ளார். முதல்வரின் பாதுகாவலர்கள் காலணிகளை வீசிய நபரைப் பிடித்து விசாரித்துவருகின்றனர். 

இதேபோன்று, ஜனவரி 31-ம் தேதி அன்று பாலசோர் மாவட்டத்தில் நடைபெற்ற தலசீரி கடற்கரைத் திருவிழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் நவீன் பட்நாயக் மீது பெண் ஒருவர் தனது காலணிகளை வீசியுள்ளார். அப்பெண்ணைக் கைதுசெய்த காவல்துறையினர், சிறையில் அடைத்துப் பிறகு விடுதலைசெய்துள்ளனர். இச்சம்பவம் நடந்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, மீண்டும் முதல்வர்மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!