வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/02/2018)

கடைசி தொடர்பு:19:00 (21/02/2018)

பஞ்சாப் முதல்வருடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்திப்பு..! காலிஸ்தான் விவகாரம் குறித்து விவாதம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்திர் சிங் ஆகியோரிடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, காலிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. 

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏழு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை வருகை தந்த அவரை பிரதமர் மோடி வரவேற்கச் செல்லவில்லை. மேலும், இதுவரையில் சென்று சந்திக்கவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில், இன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பஞ்சாப் மாநில முதல்வர் ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் இருவரும், காலிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர். முன்னதாக, ஜஸ்டின் ட்ரூட் அவரின் குடும்பத்தினருடன் அமிர்தசரஸிலுள்ள பொற்கோயிலுக்குச் சென்றார்.

அங்குள்ள உணவு தயாரிக்கும் இடத்துக்குச் சென்ற அவர், சப்பாத்தித் தயாரிக்கும் பணியிலும் அவரை ஈடுபடுத்திக்கொண்டார்.