வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (22/02/2018)

கடைசி தொடர்பு:12:35 (22/02/2018)

9 சொகுசுக் கார்கள் பறிமுதல்! நிரவ் மோடிக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் அமலாக்கத்துறை

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும், நிரவ் மோடியின் விலை உயர்ந்த ஒன்பது சொகுசு கார்களை அமலாக்கத்துறையினர் இன்று பறிமுதல்செய்துள்ளனர். 

nirav modi car seized

இந்தியாவின், பிரபல நகைக்கடை உரிமையாளரும் தொழிலதிபருமான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சிபிஐ-யிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி19-ம் தேதி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளைக்கு சீல் வைத்து, சிபிஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், நிரவ் மோடிக்குச் சொந்தமான அனைத்து நிறுவனங்களிலும் அதிரடிச் சோதனை நடைபெற்றுவருகிறது. 

இந்நிலையில், நிரவ் மோடிக்குச் சொந்தமான, இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்கள், மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல் 350, ஒரு போர்ஷ் பனமேரா கார், மூன்று ஹோண்டா கார்கள், ஒரு டொயோட்டா ஃபோர்சுனர் கார் மற்றும் ஒரு டொயோட்டா இன்னோவா கார் உள்ளிட்ட விலை உயர்ந்த ஒன்பது சொகுசு கார்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.