கணவரைக் காப்பாற்ற... கும்பலை தனி ஒருவராக விரட்டிய மனைவி! - வைரலாகும் வீடியோ

தன் கணவரைத் தாக்க வந்த விரோதிகளிடமிருந்து அவரைக் காப்பாற்றும் துணிச்சல்மிக்க ஹரியானா பெண் ஒருவரின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. 

ஹரியானா மாநிலம், யமுனா நகரில் உள்ள ஒரு விவசாய விளைநிலத்தில், தன்னிலை மறந்து மயங்கிய நிலையில் இருக்கும் ஒருவரை நான்கு பேர், உருட்டுக் கட்டையால் அடித்து விளாசும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. சுமார் 20 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சியில், மயங்கிய நிலையில் இருப்பவரை கட்டைகள் கொண்டு 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அடித்து விளாசுகின்றனர். இதைக்கண்ட அந்த நபரின் மனைவி சற்றும் தாமதிக்காமல், தன் கணவரின் உயிரைக் காப்பாற்ற எண்ணி, கையில் கட்டையுடன் களமிறங்குகிறார். தன் கணவரைத் தாக்கிய 3-க்கும் மேற்பட்ட நபர்களை, நீண்ட உருட்டுக் கட்டை ஒன்றால் விரட்டி அடித்துள்ளார். தன் கணவரின் உயிரைக் காப்பாற்ற, எதிரிகளை உருட்டுக்கட்டையால் அடித்து விரட்டிய பெண்ணின் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!