டிஎஸ்பி-யாகப் பதவியேற்கும் அதிரடி வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர்!

இந்திய மகளிர் அணியின் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், விரைவில் டிஎஸ்பியாக பதவியேற்க உள்ளார்.

ஹர்மன்பிரீத் கவுர்


இந்திய மகளிர் அணி டி20 கேப்டனாக இருப்பவர், ஹர்மன்பிரீத் கவுர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டில் இங்கிலாந் நடந்த உலக்கோப்பை கிரிக்கெட்டில் அதிரடியில் ஜொலித்தார். செமி பைனலில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 171 விளாசி இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வைத்தார். அவரின் திறமையை பாராட்டி மத்திய அவருக்கு அர்ஜுனா விருது வழங்கி பெருமைப்படுத்தியது. இதேபோல் பஞ்சாப் மாநில அரசும் அவருக்கு டிஎஸ்பி பணியிடம் வழங்கி கவுரவித்தது. இதற்கிடையே ஹர்மன்பிரீத் கவுர் ஏற்கனவே ரயில்வேயில் அதிகாரியாக பணிபுரிந்து வருவதால் மாநில அரசு அளித்த டிஎஸ்பி பதவியை ஏற்பதில் சிக்கல் உருவானது. தற்போது இந்த சிக்கல் அனைத்தையும் தீர்த்த ரயில்வேத்துறை, அவரை விடுவிக்க முன்வந்துள்ளது. அதன்படி, அவரது சொந்தமாவட்டத்தில் டிஎஸ்பியாக பதவியேற்கவுள்ளார். தென்னாப்பிரிக்க தொடரில் விளையாடி வரும் அவர், மார்ச் 1ம் தேதி பதவியேற்கவுள்ளார். 

முன்னதாக, ரயில்வே துறையிலிருந்து விடுவித்ததற்காக அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், "இந்தப் பதவியை ஏற்பதற்கு நான் மிக  ஆவலாக இருக்கிறேன். இதற்கு உதவிய ரயில்வே அமைச்சருக்கும், அமரீந்தர் சிங்கிற்கும் நன்றி. உங்கள் ஆதரவும் உற்சாகமும் எப்போதும் சிறப்பானவற்றை வெளிப்படுத்த எனக்கு ஊக்கமாக அமையும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!