வெளியிடப்பட்ட நேரம்: 09:38 (25/02/2018)

கடைசி தொடர்பு:11:20 (25/02/2018)

’ஏதோ தப்பா படுது!’ - ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப் பச்சன் பதிந்த ட்வீட்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர் கமல், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஸ்ரீதேவி
 

ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் கமல் ‘ஸ்ரீதேவியின் திறமைக்கு இளம் வயது நடிப்பே சாட்சி. மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

’ஸ்ரீதேவியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது; வருத்தமளிக்கிறது. என் பாசமிகுத் தோழியை இழந்துவிட்டேன். இந்திய திரைத்துறை ஸ்ரீதேவி என்னும் நட்சத்திரத்தை இழந்துவிட்டது’ என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுருக்கிறார்.  

ஸ்ரீதேவி மறைவு
 

இதனிடையே ஸ்ரீதேவி மறைவுக்கு சில நிமிடங்கள் முன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பகிர்ந்த ட்வீட் வைரலாகி வருகிறது. நேற்றிரவு துபாய் நேரப்படி 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதேவி மறைவு செய்தி இந்திய நேரப்படி 3 மணியளவில்தான் ஊடகங்களில் வெளியானது. ஆனால் நேற்றிரவு 1.15 மணியளவில் நடிகர் அமிதாப் பச்சன் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ஏதோ தப்பா படுது.. வித்தியாசமான பதட்டம் நிலவுகிறது.. ஏன் என்று தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ட்வீட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவி மறைவு செய்தி வெளியானது. இதனையடுத்து அமிதாப் பச்சனின் ட்விட்டர் பதிவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். ’ஸ்ரீதேவியின் மறைவுப் பற்றி அமிதாப் பச்சனின் ஆறாம் உணர்வுக்கு முன்பே தெரிந்திருக்கிறது’ , ’இதை நம்பவே முடியவில்லை’ என்று நெட்டிசன்ஸ் ரீட்வீட் செய்து வருகின்றனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க