’புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்த மண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள்!’ - மோடி காட்டம் #LiveUpdates | Prime minister modi at Puducherry

வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (25/02/2018)

கடைசி தொடர்பு:14:39 (25/02/2018)

’புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்த மண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள்!’ - மோடி காட்டம் #LiveUpdates

'புதுச்சேரில் உள்ள ஆட்சி நல்ல முறையில் செயல்படுகிறதா?  நம்மோடு சுதந்திரம் பெற்ற பல நாடுகள் நம்மைவிட பல மடங்கு முன்னேறியிருக்கிறார்கள். நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இந்தியாவை 48 ஆண்டுகள் ஒரு குடும்பம் ஆட்சி செய்திருக்கிறது. 48 ஆண்டுகளில் அவர்கள் என்ன சாதித்தார்கள் என்று அறிவு ஜீவிகள் யோசித்து பார்க்க வேண்டும்.  அதேபோல பத்து ஆண்டுகளாக அந்த குடும்பத்தின் ரிமோட் மூலம் ஆட்சி நடைபெற்றது.' என்று மோடி பேசிவருகிறார். 

’புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்த மண்ணுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளாக தடைகள் உள்ளன’ என்று மோடி காட்டமாக தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி ‘புதுச்சேரி மக்கள் விருந்தினர்களை தெய்வத்துக்கு இணையாக கருதுபவர்கள். புதுச்சேரிக்கு வந்த பிறகுதான் பாரதியார் தேசியக் கவியாக மாறினார். மகாகவி பாரதியாரை அன்போடு ஏற்று கொண்டவர்கள் புதுச்சேரி மக்கள். ஆங்கியேலரிடம் இருந்து தப்பி வந்த அரவிந்த் கோஷுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் புதுச்சேரி மக்கள்’ என்று புகழாரம் சூட்டினார். 

புதுச்சேரியில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி ’வணக்கம், புதுச்சேரி சகோதர சகோதரிகளே உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்’ என்று தமிழில் பேசத் தொடங்கினார். 

modi

ஆரோவில் பொன்விழாவை தொடர்ந்து புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். பொதுக்கூட்டம்  நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மோடி

பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஆரோவில் சென்றடைந்தார் பிரதமர் மோடி. ஆரோவில் 50 வது உதயதினத்தையொட்டி ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னை மற்றும் மாத்ரி மந்திர் அடங்கிய அஞ்சல் தலையை மோடி வெளியிட்டார். 

modi
 

பொன்விழாவில் பேசிய பிரதமர் மோடி ’உலகின் ஒட்டுமொத்த மக்களையும் ஆரோவில் அமைப்பு ஒருங்கிணைக்கிறது. ஆரோவில் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில்  மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 50 ஆண்டுகளாக ஆரோவில் சிறந்த சமூக, கலாச்சார, ஆன்மிக பணிகளை ஆற்றி வருகிறது.  பொருளாதாரத்தையும் ஆன்மீகத்தையும் தேடுபவர்களின் ஒருங்கிணைந்த இடமாக ஆரோவில் அமைந்துள்ளது. ஆரோவில் முடிவில்லா கல்விக்கான இடம். தரம்வாய்ந்த கல்வியை ஆரோவில் ஊக்குவிக்கிறது. இளைஞர்களை நன்முறைக்கு அழைத்துச்செல்கிறது’ என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

மோடி

பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஆரோவில் சென்றடைந்தார் பிரதமர் மோடி. 

மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஆரோவில் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க புதுச்சேரி வந்தடைந்தார். சர்வதேச நகரமான ஆரோவில் பொன்விழாவில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி வந்த பிரதமர் மோடியை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் வரவேற்றனர்.

மோடி

 

அதையடுத்து அங்கிருந்து மரைன் வீதி வழியாக காரில் சென்ற அவர் ஸ்ரீ அரவிந்த அன்னை ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு அன்னை வாழ்ந்த இடங்களைப் பார்வையிடும் அவர் ஆசிரமப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

மோடி

அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி அதே சாலை வழியாக லாஸ்பேட்டை கிழக்குக் கடற்கரை சாலைக்கு வந்தடையும் அவர் கொக்கு பார்க், ராஜீவ் காந்தி சிக்னல், கோரிமேடு, இடையஞ்சாவடி வழியாக 11.30 மணிக்கு ஆரோவில் சென்றடைகிறார்.

அங்கு பொன்விழா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அதே வழியாக கிழக்குக் கடற்கரை சாலை வந்து 2.30 மணிக்கு பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும் விமானதள மைதானத்திற்கு செல்கிறார். பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திவிட்டு 3.10 மணிக்கு விமான நிலையம் செல்லும் அவர் முக்கிய விருந்தினர்களையும், தலைவர்களையும் சந்தித்துவிட்டு 3.25 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு 4.15 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க