வெளியிடப்பட்ட நேரம்: 06:16 (26/02/2018)

கடைசி தொடர்பு:07:16 (26/02/2018)

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!

வயிற்று வலி பிரச்னை காரணமாக, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வயிற்று வலி மற்றும் உணவு ஒவ்வாமை காரணமாக, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பிப்ரவரி 15-ம் தேதி கோவாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அந்த மருத்துவமனை ஆலோசனைப்படி, அங்கிருந்து மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சைக்குப் பிறகு கடந்த வியாழனன்று மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்பினார். பின்னர், அம்மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், நேற்று அவர் மீண்டும் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிகப்பட்டார். இதுகுறித்து தெரிவித்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே, 'மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மருத்துவர்களால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. அவர், நீர் வறட்சி(dehydration) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.