தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர்கள்மீது ரயில் மோதி விபத்து! 6 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர்கள்மீது ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 

Photo credit: ANI

காஸியாபாத் மாவட்டத்தின் சாதிக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 14 முதல் 16 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 7 பேர், ரயில் தண்டவாளத்தை நேற்று (25.2.2018) இரவு கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த  ரயில் அவர்கள்மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒருவர், மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைபெற்றுவருகிறார். விபத்துகுறித்து தகவலறிந்த பொதுமக்கள், அப்பகுதியில் பெருமளவில் கூடினர். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், மக்களை சமாதானப்படுத்தினர். 
திருமண வீடுகளில் சமையல் செய்பவர்களுக்கு உதவிசெய்யும் பணியில் ஈடுபட்டுவந்த விஜய், ஆகாஷ், சமீர், ஆரிஃப், சலீம் என 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில், போலீஸ் எஸ்.பி. ராம்மோகன் சிங் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!