பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்ததால் ஹோலி பண்டிகையைத் தவிர்க்கும் பீகார் முதல்வர்!

பீகார் பள்ளி ஒன்றில் வாகனம் புகுந்ததில், ஒன்பது மாணவர்கள் உயிரிழந்தனர். அதனால், இந்த ஆண்டு ஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்தை ரத்துசெய்துள்ளார், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார். 

பீகார்

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மபுரா எனும் பகுதியில், கடந்த 24-ம் தேதி அன்று, பள்ளி வகுப்பு முடிந்து தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசென்ற குழந்தைகள்மீது, கட்டுப்பாட்டை இழந்தநிலையில் சாலையில் வந்த வாகனம் ஒன்று மோதியது. இந்த வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி, பல குழந்தைகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து தொடர்பான விசாரணை நடந்துவரும்நிலையில், வாகனத்தை ஓட்டியவர் பா.ஜ.க-வைச் சேர்ந்த மனோஜ் பைதா என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மனோஜ் பைதா பா.ஜ.க-விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. பள்ளி மாணவர்கள் 9 பேர் இறந்ததால், முதல் மந்திரி நிதிஷ்குமார் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டத்தை ரத்துசெய்துள்ளார் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!