தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை பதறவைத்த `லக்கேஜ்'!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புறப்பட இருந்த ஹெலிகாப்டரில் சிறிய தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

telangana cm

தெலங்கானாவின் கரிம்நகர் மாவட்டத்தில் அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இருந்த ஹெலிகாப்டர் புறப்பட தயாரானது. திடீரென சந்திரசேகர ராவின் லக்கேஜ் வைக்கப்பட்ட அறையிலிருந்து புகை கிளம்பியது. பையில் இருந்து ஏன் புகை வெளியாகிறது என்று சந்திரசேகர ராவ் யோசித்துக்கொண்டுருக்கும்போதே, சற்றும் தாமதிக்காத பாதுகாப்பு அதிகாரிகள் புகைந்துகொண்டிருந்த பையை ஹெலிகாப்டரிலிருந்து அப்புறப்படுத்தினர். அந்தப் பையில் என்ன இருந்தது; எப்படி தீ பிடித்தது என்பது பற்றி இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. பையில் தகவல் தொடர்பு சாதனம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ புகைந்துகொண்டிருந்த பையைப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தில்லாகத் தூக்கிக்கொண்டு ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!