ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைக்கத் துபாய் போலீஸ் அனுமதி!

நடிகை ஸ்ரீதேவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க துபாய் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. 

ஸ்ரீதேவி

கடந்த சனிக்கிழமை இரவு இந்திய சினிமா நட்சத்திரமாக அறியப்பட்டு வந்த நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து அவரது உடலை இந்தியா கொண்டுவருவதற்கு தனி விமானம் துபாய் அனுப்பப்பட்டது. இதையடுத்துதான் சிக்கல் உருவானது. துபாய்  நாட்டு சட்டப்படி தடயவியல் சோதனைக்குப் பிறகே, அவரது உடல்  ஒப்படைக்கப்படும் என்று காவல்துறை கண்டிப்பு காட்ட, பின்னர், பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனையில் அவர் மது அருந்தியதற்கான தடயங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் அவரது மரணத்தில் சந்தேகம் எழுப்பப்படவே, உடலை கொண்டுவருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. 

இதற்கிடையே, அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கத் துபாய் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கலீஜ் டைம்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. இத்தக் கவலை இந்திய தூதரகமும் தற்போது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது. காவல்துறையின் அனுமதி கிடைத்துள்ளதால் ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்படவுள்ளது. எம்பாமிங்க்குப் பின், அவரது உடல் இன்று அல்லது நாளைக்குள் இந்தியா கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!