`ஒரு ரூபாய் நஷ்ட ஈடு!’ - பா.ஜ.க எம்.பி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ், பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு எதிராக மைசூர் நகர நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். 

அவதூறு

மைசூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி பிரதாப் சிம்ஹா. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு, நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து, சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில், அவதூறான கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அவர், அவதூறாகப் பதிவிட்ட கருத்தைப் பற்றி விளக்கம் கேட்டு பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

அந்த நோட்டீஸுக்கு பிரதாப் சிம்ஹா இதுவரை பதிலளிக்காத நிலையில், மைசூர் நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், மானநஷ்ட வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தன்னைப்பற்றி அவதூறான கருத்தைப் பதிவிட்ட பாரதிய ஜனதா கட்சியின், மைசூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. பிரதாப் சிம்ஹா உடனடியாக அதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், தன்னைப் பற்றி அவதூறான கருத்தைப் பதிவிட்டதற்கு நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். வருகின்ற மார்ச் 3-ம் தேதியில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!