`களைகட்டும் வண்ணங்களின் திருவிழா!’ - தலைவர்கள் வாழ்த்து

வண்ணங்களின் திருவிழா என்றழைக்கப்படும் ஹோலிப் பண்டிகை வடமாநிலங்களில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஹோலிப் பண்டிகை

ஹோலி பண்டிகையை ஒட்டி நாட்டு மக்களுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ``நாட்டு மக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, நமது சமூகத்தில் உள்ள நல்லிணக்கத்தின் கொண்டாட்டம். ஹோலி பண்டிகை அனைவரது வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். `நாட்டு மக்கள் அனைவருக்கு இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துகள்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

அதேபோல் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் வாழ்த்துச் செய்தியில், `குளிர்காலம் முடிந்து வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. ஹோலிக்கு முந்தைய நாள் இரவில் கொண்டாடப்படும் தீயிட்டுக் கொளுத்தப்படும்  `ஹோலிக்கா தஹன்’  நிகழ்வு கெட்ட எண்ணங்களைக் கொளுத்துவதைக் குறிக்கிறது. மக்கள் அனைவரது வாழ்விலும் அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி உள்ளிட்டவற்றை இந்த ஹோலி கொண்டுவரட்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாழ்த்துச் செய்தியில், ` அன்பின் உருவான என்னுடைய பாட்டிக்கு 93 வயது. ஹோலி வாழ்த்துச் சொல்லி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறேன். அனைவருக்கும் ஹோலிப் பண்டிகை வாழ்த்துகள். மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.    
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!